மஞ்சுவிரட்டு போட்டி - சீறிபாய்ந்த காளைகள்

x

சிவகங்கை மாவட்டம் நெடுமரம் கிராமத்தில் உள்ள மலையரசி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக 203 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஒரு சுற்றுக்கு 27 வீரர்கள் என 54 பேர் களம் இறங்கி, தங்களது வீரத்தை பறைசாற்றும் விதமாக காளைகளை அடக்க முற்பட்டனர். காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 34 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்