திடீரென சூழ்ந்த பயங்கர இருள்... 10 நாட்களாக பரிதவிக்கும் சிவகங்கை மக்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மின்சாரம் இன்றி 10 நாட்களாக இருளில் மூழ்கியுள்ள தட்டான்குளம் கிராமம்
பலத்த காற்று மழையால் ஆல மர கிளை விழுந்து, மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் 2 மின் கம்பங்கள் சேதம்
முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றும் செலவை யார் ஏற்பது என மின்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் இடையே குழப்பம்
10 நாட்களாக மின்சாரம் இல்லாததால் குடிநீர் இன்றி, தூக்கம் தொலைத்து நிற்பதாக கிராம மக்கள் வேதனை
மின் மோட்டார்களை இயக்க முடியாததால் நெல் வயல்கள் தென்னந்தோப்புகள் தண்ணீர் இன்றி காய்வதாக விவசாயிகளும் குமுறல்..