சிமெண்ட் மூட்டை தூக்கி சென்ற பள்ளி மாணவர்கள் - அதிர்ச்சி வீடியோ

Update: 2025-04-18 05:53 GMT

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் ஒன்றான பூண்டி கிராமத்தில் அரசுப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், இந்த பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவர் பள்ளியில் நடக்கும் பராமரிப்பு பணிக்காக இருசக்கர வாகனத்தில் சிமெண்ட் மூட்டையை எடுத்துச்சென்றுள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்