இளம்பெண் மர்ம மரணம் - உறவினர்கள் சாலை மறியல்
சேலம் இளம்பிள்ளை அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கணவரை கைது செய்யகோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இடங்கணசாலை பகுதியை சேர்ந்த ராஜன் என்பவருக்கும், பாறைக்காடு பகுதியை சேர்ந்த சுந்தரிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், சுந்தரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுந்தரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், கணவர் உள்பட 4 பேரை கைது செய்ய கோரி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
