ATM-ல் பணம் எடுக்க தெரியாமல் உதவி கேட்பவர்களே உஷார்.. ரூ.1 லட்சத்தை சுருட்டிய திருடர்கள்

Update: 2025-04-19 05:23 GMT

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.புதூர் கிராமத்தை சேர்ந்த சேகர், வங்கிக் கணக்கிருப்பை தெரிந்து கொள்வதற்காக ஏ.டி.எம் சென்றபோது, பணப்பரிவர்த்தனை செய்யத் தெரியாமல் தவித்துள்ளார். அப்போது அங்கிருந்த மற்றொரு நபர், உதவி செய்வதாக கூறி, சேகரிடம் வேறொரு ஏ.டி.எம் கார்டை கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார். அடுத்த சில மணி நேரத்தில் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 500 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சியான சேகர், தன்னை ஏமாற்றிய மர்மநபர் மீது, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்