இந்தியாவை விட்டு வெளியேற மறுப்பு - நேற்று பாய்ந்த வழக்கு.. இன்று பாகிஸ்தான் பெண் எடுத்த முடிவு

Update: 2025-04-29 09:40 GMT

புதுச்சேரியில் பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு இந்தியாவை விட்டு வெளியேற நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதால் முதலமைச்சரிடம் உதவி கேட்டு கோரிக்கை வைத்துள்ளார். காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் குடியுரிமையுடையவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், புதுச்சேரியில் 13 ஆண்டுகளாக கணவர் குழந்தைகளோடு வசித்து வரும் பஃவ்சியா பானுவுக்கு என்ற பாகிஸ்தான் பெண்ணை வெளியேற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விசா முடிந்துள்ளதாக கூறி போலீசார் வழக்குப் பதிந்துள்ள நிலையில், பஃவ்சியா முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்