Rameshwaram Dog | புனித நீராட காத்திருந்த முதியவரை கடித்த தெருநாய் - ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி
ராமேஸ்வரத்தில் புனித நீராட காத்திருந்த முதியவரை நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமசுவாமி கோயிலுக்கு 65 வயதான முதியவர் கருணாநிதி தன் குடும்பத்துடன் வருகை தந்தார் . இந்த நிலையில் புனித நீர் கிணற்றில் நீராட காத்திருந்த அவரை தெருநாய் ஒன்று கடித்தது . உடனடியாக மீட்கப்பட்ட அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பேசிய முதியவர், கோயில் நிர்வாகம் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்..