விஜய்க்கு ராமநாதபுரத்தில் இருந்து போன அதிர்ச்சி செய்தி - மாறி மாறி நீக்கம்.. குழப்பத்தில் தொண்டர்கள்
தமிழக வெற்றிக் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட தலைவராக செயல்பட்டு வரும் மலர்விழி ஜெயபாலாவுக்கும், அமைப்பாளர் பிபி ராஜாவுக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த வேளையில் பிபி ராஜா, மலர்விழி ஜெயபாலாவை அழைக்காமல் விலையில்லா விருந்தகம் பெயரில் அன்னதானம் வழங்கியிருக்கிறார்.
இதனையடுத்து தன்னிச்சையாக செயல்பட்டார் என பிபி ராஜாவை, மலர்விழி ஜெயபாலா கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார். அதே வேகத்தில் மலர்விழி ஜெயபாலா நீக்கப்படுகிறார் என பிபி ராஜா தரப்பு அறிவித்துள்ளது. இதனால் யார் கட்சி நிர்வாகி என கட்சி தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எங்கிட்ட பணம் வாங்கிவிட்டு மலர்விழி ஜெயபாலா எனது பெயர் வெளியே வரவிடாமல் தடுக்கிறார் என பிபி ராஜா குற்றம் சாட்டினார்.