ராஜஸ்தானில் பாலைவன மணலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் அப்பளம் பொரிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வாட்டி வதைக்க பாலவன மணலும் கொதிக்கிறது. வழக்கமாக நம்ம ஊரில் வெயில் வாட்டும் போது சாலையில் முட்டையை ஆம்ப்லேட் போடுவது போல், பாலைவன பகுதியில் அப்பளம் பொரிப்பது பொதுவான நிகழ்வாக இருக்கிறது. அதுபோல் பாலைவன மணலில் ராணுவ வீரர் அப்பளம் பொரிக்கும் காட்சி வேகமாக பரவி வருகிறது.