திடீர் மறியலில் இறங்கிய கிராம மக்கள்... குவிந்த போலீசார்... தள்ளுமுள்ளு பரபரப்பு
திடீர் மறியலில் இறங்கிய கிராம மக்கள்... குவிந்த போலீசார்... தள்ளுமுள்ளு பரபரப்பு
முத்துப்பேட்டை அருகே விளை நிலங்களில் இறால் பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்ற கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தெற்குகாடு பகுதியில் விளை நிலங்களை ஆக்கிரமித்து இறால் பண்ணை அமைக்க முயற்சிக்கும், தனியார் நிறுவனத்தை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து பேரணியாக செல்ல முயன்ற கிராம மக்களை போலீசார் தடுக்க முற்பட்டபோது, இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.