தமிழகம் முழுவதும் பணியை புறக்கணித்து போராடும் வழக்கறிஞர்கள்

Update: 2024-07-01 10:00 GMT

புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதை கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள், இந்த நாளை கருப்புதினமாக அனுசரித்து வருகின்றனர். மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்கள் என 6 நீதிமன்றங்களிலும் உள்ள 500ககும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணிகளை புறக்கணித்துள்ளனர். திருப்பூரில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் தொகுதி எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், மாநகராட்சி துணை மேயர் தமிழகன் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்ட முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வழக்குப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்