ரூ.20,000 கோடி மதிப்பில் திட்டங்கள்.. சாலையில் தொடங்கி விமானம் வரை.. மாறப்போகும் தமிழ்நாடு

Update: 2024-01-02 10:56 GMT

தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

சுமார் ஆயிரத்து 112 கோடி ரூபாய் மதிப்பில் திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

விமானப் போக்குவரத்து, ரயில், சாலை, கப்பல், உயர் கல்வி, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் தொடர்பான சுமார் 19 ஆயிரத்து 800 கோடி மதிப்பில் திட்டங்களை அர்ப்பணித்த பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

காரைக்குடி-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை நடைபாதையுடன் கூடிய 2 வழிப்பாதை திட்டம், செட்டிகுளம்- நத்தம், திருச்சி - கல்லகம், சேலம்- திருப்பத்தூர் - வாணியம்பாடி 4 வழிப்பாதை திட்டம் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்