பொங்கல் பரிசு தொகுப்பு - உங்கள் வீட்டுக்கே வரும் டோக்கன்...

x

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன், விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. சென்னை திருவல்லிக்கேணியில் ​வீடு வீடாகச் சென்ற ரேஷன் கடை ஊழியர், டோக்கனை வழங்கினார். அதில், பரிசு தொகுப்பு பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. வருகிற 9ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இல்லத்தரசிகள், தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்