கோபத்தில் லாரி டிரைவரை தாக்கிய போலீசார் | வைரலாகும் சிசிடிவி காட்சி

Update: 2025-04-11 10:52 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, லாரி ஓட்டுனரை போலீசார் தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்திலிருந்து வந்த லாரி ஒன்று சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வந்த போது, எதிர்திசையில் தனியார் மில் வேன் வந்ததால் எதிரெதிரே வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது காவல்துறையினர் லாரியை நகர்த்தும்படி கூறியதற்கு, லாரி ஓட்டுனர் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த போலீசார் லாரி ஓட்டுனரை தாக்கியுள்ளனர். தொடர்ந்து இரு வாகனங்களையும் நகர்த்த செய்து போக்குவரத்தை சீர்படுத்தினர். தற்போது போலீசார் லாரி ஓட்டுனரை தாக்கும் காட்சி வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்