"இவரை நம்பி அனுப்பியதற்கு.. ச்சே!" வாலிபால் மாணவியிடம் அசிங்கமாக நடந்த பேராசிரியர்..

Update: 2025-03-27 08:39 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு பயின்று வரும் மாணவி, வாலிபால் போட்டியில் பங்கேற்க வெளியூர் சென்ற போது உடன் சென்ற கல்லூரி பேராசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், பேராசிரியரின் கார் ஓட்டுநரும், மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் பேராசிரியரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்