பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு விரைவில் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிட்கோ விண்ணப்பதை பரிசீலனை செய்வது தொடர்பாக டெல்லியில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் தமிழக தொழில் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய தமிழக அதிகாரிகள், பரந்தூர் விமான நிலையம் திட்டம் தொடர்பாகவும் மத்திய அரசு அதிகாரிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்துள்ளனர். 20 கிராமங்களை உள்ளடக்கி 5 ஆயிரத்து 476 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்தூர் விமானநிலையம் அமைக்கப்பட உள்ளது.