நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக புல்லட் என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. நாள்தோறும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளை இடித்து அங்கிருக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்று வருகிறது. இந்த சூழலில் யானையை பிடிக்க முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற கும்கி யானைகளான பொம்மன் மற்றும் சீனிவாசன் என்ற இரு யானைகள் தற்போது சிங்கோன பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.