நெல்லை ஜாமியா பள்ளிவாசல் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பள்ளி வேன் தரைபாலத்தில் உள்ள தண்ணீர் குழாயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாய்க்கால் பாலத்தில்
இருந்த தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் பீச்சி அடித்து கொண்டு வெளியேறியது. விபத்தில் சிக்கிய வேன் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.