புதுச்சேரியில் உள்ள மாநில அரசின் கூட்டுறவு வங்கி ஏடிஎம் மையத்தில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலைய சாலையில், அம்மாநில அரசின் கூட்டுறவு வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தின் திரையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு, இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் குழம்பி உள்ள நிலையில், இதனை விரைந்து சரி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.