நீட் தேர்வு விவகாரம்.. சட்டமன்றத்தில் இபிஎஸ் - மு.க.ஸ்டாலின் இடையே காரசார விவாதம்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறியது என்ன ஆனது? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், அ.தி.மு.க. தான் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்ததாகவும், நீட் தேர்வை மத்திய அரசு தான் ரத்து செய்ய முடியும் எனவும் பதிலளித்தார். மாநில அரசு ரத்து செய்ய முடியாது என தெரிந்தும் ஏன் தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்கள்? என ஈ.பி.எஸ். கேள்வி எழுப்பிய நிலையில், இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் நீட் தேர்வை நிச்சயம் ரத்து செய்திருப்போம் என முதல்வர் பதில் அளித்தார். அதற்கு, இந்தியா கூட்டணி எப்போதும் ஆட்சிக்கு வராது என கூறிய ஈ.பி.எஸ்., கூட்டணியில் இருக்கும் கட்சிகளே விலகி விட்டதாக விமர்சித்தார். குறுக்கிட்ட முதலமைச்சர், தேர்தலின் போது கூட்டணி வரும் போகும், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகவில்லையா? என விமர்சித்தார்