தமிழகத்தில் 13 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதி இருந்த நிலையில், 4 ஆயிரத்து 400 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 400க்கும் மேற்பட்டவர்கள், 500க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளதால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதில் அரசு பள்ளி மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே 350 முதல் 400 மதிப்பெண்கள் வரை எடுத்த மாணவர்களுக்கு இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.