நாகை மாவட்டத்தில் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிய தொடங்கியதால், கடைமடை விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால், 50 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கின. இந்நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்ததை அடுத்து, மழைநீர் வடிய தொடங்கியுள்ளது. தண்ணீர் முழுமையாக வடிந்த பின்னரே சம்பா பயிர்கள் பிழைக்குமா என்பது தெரியும் என்றும், பயிர்கள் கைகொடுக்கா விட்டால் தமிழக அரசே கருணை காட்ட வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.