நடுக்கடலில் 4 நாட்கள் தவித்த தமிழர்கள் - மீண்டும் மீண்டும் நடக்கும் அட்டூழியம்
நாகை மீனவர்களின் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை, இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகையில் இருந்து கடந்த 24-ஆம் தேதி பைபர் மீடகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது கோடியக்கரை அருகே, அதிவேக பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர், பட்டா கத்தியுடன் மீனவர்களின் படகில் ஏறி உள்ளனர். மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகள், GPS கருவி, வாக்கி டாக்கி, செல்போன் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை திருடி சென்றனர். தொடர்ந்து 4 நாட்கள் நடுக்கடலில் தவித்துள்ள நாகை மீனவர்களை, அவ்வழியே வந்த செருதூர்
வந்தடைந்த மீனவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.