நாகை கடலில் தங்கமீன் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நாகப்பட்டினம், நம்பியார் நகரில் தங்கமீனுடன் படகில் நடுகடலுக்கு சென்ற அதிபக்தநாயனாரை பக்தர்கள் சிவபெருமானுக்காக கடலில் தங்க மீனை விட்டு எடுத்தனர். தங்கமீன் விடும் திருவிழாவில், சிவனடியார்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டு அதிபக்த நாயனாரை வேண்டிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.