வெட்டப்பட்ட ஆட்டு தலையுடன் காவல்நிலையத்திற்கு சென்ற பெண்
நாகையில் தனது ஆட்டை திருடியவரை கைது செய்யக்கோரி வெட்டப்பட்ட ஆட்டின் தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
வடக்கு பொய்கைநல்லூரை சேர்ந்த பூங்கொடி என்பவர் வளர்த்து வந்த ஆடு காணாமல் போயுள்ளது. பல்வேறு இடங்களில் தேடிய அவர், தொடர்ந்து கல்லார் பகுதியில் உள்ள இறைச்சி கடைக்கு சென்றதில் அங்கு தனது ஆடு வெட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ஆட்டின் தலையை எடுத்துக்கொண்டு காவல்நிலையம் சென்ற அப்பெண் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் இறைச்சி கடைக்காரரான செய்யது அகமது என்பவரை கைது செய்தனர்.
Next Story