பைக்கை திருடும் போது திரும்பி பார்த்த நபர் - உடனே திருடன் செய்த செயல் தான் ஹைலைட்
நாகையில் கடைத்தெரு பின்புறம் உள்ள பழம் தெரு 4-வது சந்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி செல்லும் காட்சி சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நான்கு பேர் கொண்ட கும்பல் வாகனத்தை கள்ளச் சாவி போட்டு எடுப்பது போன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில், இதுகுறித்து வாகன உரிமையாளர் ஜாகீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.