"150 பேர கூப்பிட்டு வாங்க.. தியேட்டர்ல இருந்தே தூக்கிடுறேன்'' சவாலாக அறிவித்த மர்மர் இயக்குந
மர்மர் படத்தை பொதுமக்கள் நன்றாக இல்லை என கூறினால், திரையரங்கில் இருந்து நீக்கி விடுகிறேன் என அப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் தெரிவித்துள்ளார். படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில், இன்ஃபுளுயன்சர்களை வைத்து புரோமோட் செய்யப்பட்ட மர்மர் படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இயக்குநர், பொதுமக்கள் நன்றாக இல்லை என கூறினால் படத்தை திரையரங்கில் இருந்து எடுத்து விடுகிறேன் என கூறினார்.