குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டு, தாய் தற்கொலை
சென்னையில் இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டு, தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சியை சேர்ந்த சரவணன், தனது மனைவி ஜெயந்தி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் தேனாம்பேட்டையில் வசித்து வந்தார். கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் 2 குழந்தைகளின் கழுத்தையும் லேசாக அறுத்து காயப்படுத்திய ஜெயந்தி, தானும் கழுத்தை அறுத்துக்கொண்டார். தொடர்ந்து தண்ணீர் பேரலில் தலைக்குப்புற விழுந்து ஜெயந்தி தற்கொலை செய்துகொண்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குழந்தைகளை சரியாக பார்த்துக்கொள்ள முடியவில்லை என, ஜெயந்தி மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
Next Story