லிப்ட் கேட்டு சென்ற கணவருக்கு நேர்ந்த கதி..கலெக்டர் காலில் விழுந்து கதறி அழுத மனைவி
மயிலாடுதுறையில், விபத்தில் சிக்கிய தொழிலாளி, ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தார். செங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜூ, பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற போது விபத்தில் சிக்கினார். அவரது கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், விபத்து தொடர்பாக, போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என மனு அளித்தார்.