கோயில் திருவிழா முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு

Update: 2025-03-29 02:57 GMT
கோயில் திருவிழா முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 300 க்கும் மேற்பட்ட காளைகள் சீறிபாய்ந்தன. கொட்டாம்பட்டி அருகே வி.புதூரில் உள்ள முத்துபிடாரி அம்மன் கோவில் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. தொடர்ந்து தொழுவத்தில் இருந்து அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி உற்சாகம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்