மகனின் திருமணம்... பத்திரிகை வைக்க சென்ற அப்பா ரத்த வெள்ளத்தில் பலி

Update: 2025-04-29 09:57 GMT

மகனின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க சென்றவர் விபத்தில் பலி

மதுராந்தகம் அருகே இருசக்கரவாகனத்தின் மீது, கார் மோதியதில்

ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வராஜ், தனது மகனின் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க ஸ்கூட்டரில் சென்றிருக்கிறார். அப்போது சாலையை கடக்க முயன்ற செல்வராஜின் ஸ்கூட்டர் மீது அதி வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் செல்வராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்துகுறித்து வழக்கு பதிவு செய்த அச்சரபாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்