வைகை குறித்த ஷாக் ரிப்போர்ட்.. இத கேட்டா மதுரை உட்பட 5 மாவட்ட மக்கள் அதிர்ச்சியடைவீர்கள்

Update: 2024-11-12 03:29 GMT

வைகை ஆற்றில் 177 இடங்களில் கழிவுநீர் கலப்பது கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் வைகை ஆற்றின் மூல வைகை முதல் ராமநாதபுரம் முகத்துவாரம் வரை பல்லுயிர் சூழல் வளம் குறித்து 6 நாட்கள் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.ஆய்வின் முடிவுகளை அறிக்கையாக ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் வழங்கினார்கள்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயற்கை ஆய்வாளர் ரவீந்திரன், 4,000 கிலோ மீட்டர் பறந்து வரும் வலசை பறவைகளுக்கு உணவு அளிக்கும் இடமாக வைகை ஆறு உள்ளதாக தெரிவித்தார். ஐந்து மாவட்டங்களில் பயணிக்கும் வைகை ஆற்றில் 177 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது எனவும் இதில் மதுரையில் 64 இடங்களிலும், ராமநாதபுரத்தில் 64 இடங்களிலும் கழிவுநீர் கலக்கிறது என்றும் ரவீந்திரன் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்