உலுக்கி போட்ட பிரபலத்தின் மரணம் - உடனே நேரில் ஓடி வந்த சந்தானம்

Update: 2024-11-11 02:25 GMT

700 சிறுகதைகள், 340 நாவல்கள் மற்றும் 105 தொடர்களை எழுதி புகழ் பெற்ற இந்திரா சவுந்தராஜன், சிருங்காரம், ஆனந்தபுரத்து வீடு, இருட்டு ஆகிய திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். மர்ம தேசம், சொர்ண ரேகை, விடாது கருப்பு போன்ற இவரின் படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாகவும் வந்துள்ளன. எழுத்து உலகில் புகழ் மிக்கவராக திகழ்ந்த இந்திரா சவுந்தராஜன், மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு நடிகர் சந்தானம் மாலை அணிவித்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதுபோல பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா மற்றும் எழுத்தாளர்கள், வாசகர்கள் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்