“ஊது.. ஊது.. என்ன பீபீ ஊதுறியா''.. மதுபோதையில் வந்தவரை டெஸ்ட் எடுக்க பாடாய்பட்ட போலீசார்
மதுரை மாநகர் பகுதியில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிவதற்கான வாகன தணிக்கையை போக்குவரத்து காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் இருந்து பழங்காநத்தம் நோக்கிவந்த கார் அழகப்பன் நகர் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே தடுப்புக்கம்பிகளை உடைத்தெறிந்தபடி எதிர்ப்புற சாலைக்கு சென்று நின்றது. பின்னர் காரை மீட்டு போக்குவரத்தை சரிசெய்த போலீசார், காரை ஓட்டிவந்த சிவா என்பவரை விசாரித்தனர். மதுபோதையின் அளவீடு குறித்து பார்ப்பதற்காக Breath Analizer மூலமாக நீண்டநேரம் போராடி டெஸ்ட் எடுத்தனர்.