தேசியக் கொடியை ஏற்ற விடாமல் பெண்கள் போராட்டம் - மதுரையில் பரபரப்பு | Madurai | 76th Republic Day
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேசியக்கொடியை ஏற்ற விடாமல் பெண்கள் முற்றுகையிட்டனர். உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 15வது வார்டு கருக்கட்டான்பட்டி காலணியில் 200க்கும் அதிகமான பட்டியலின மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு முறையான பொதுக் கழிப்பறை இல்லாததால் பொது வெளியிலேயே இயற்கை உபாதைகளை கழித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் பெண்கள் முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.