+2 மாணவிக்கு தேர்வு அறையில் வைத்தே பாலியல் தொல்லை

Update: 2025-03-19 08:11 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவிக்கு தேர்வு அறையில் பாலியல் தொல்லை கொடுத்த முதுகலை ஆசிரியரை, போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி, அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுதச் சென்றபோது, மேற்பார்வையாளராக வந்த ஆசிரியர் ரமேஷ், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ரமேஷ் கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்