கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த நகை பட்டறை நடத்தி வரும் சுரேஷ், கோவையில் நகையை விற்பனை செய்துவிட்டு தனது நண்பரான செல்வகுமார் உடன் பாலக்காடு நோக்கி வந்தபோது அவர்களை வழிமறித்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி சுரேஷிடம் பணத்தைப் பறித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், மரப்பாலம் அருகே சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரித்ததில் , அவர்கள் பாலக்காட்டை சேர்ந்த நகை பட்டறை வியாபாரிகள் சுமித் நாகேஷ் மற்றும் சனீஸ் கோவிந்தன் என்பதும், இவர்கள் தான் சுரேஷிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 41 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.