மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க 20 மூட்டையில் பணத்தை எடுத்து வந்த கணவர் - மலைத்த கோர்ட்..

Update: 2024-12-20 02:53 GMT

கோவை மாவட்டத்தில் மனைவிக்கு வழங்க வேண்டிய ஜீவனாம்ச பணத்தை கணவன் ஒருவர் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களாக எடுத்து வந்தார்.

குடும்பநல நீதிமன்றத்தில் ஒரு தம்பதி விவகாரத்திற்கு விண்ணப்பித்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கணவன் 2 லட்சம் ரூபாயை, மனைவிக்கு ஜீவனாம்சமாக வழங்கவேண்டும் என உத்தரவிட்டார். இதன்பேரில், ஜீவனாம்ச பணத்தை கொண்டு வந்த கணவன், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை நோட்டாகவும் 80 ஆயிரம் ரூபாயை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களாகவும் கொண்டு வந்தார். நாணயங்கள் மட்டுமே 20 பைகளில் எடுத்து வரப்பட்டது. இதனை பார்த்த நீதிபதி நாணயங்கள் அனைத்தையும் நோட்டாக மாற்றிவிட்டு வருமாறு அவரை திருப்பி அனுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்