சீரற்ற இதயத்துடிப்பு.. ICU-வில் இருந்த நபர்.. நோயாளிக்கு CRT-D கருவி பொருத்தி அரசு மருத்துவமனை சாதனை

Update: 2025-02-06 05:49 GMT

தமிழக அரசு மருத்துவமனைகளில் முதல்முறையாக, கோவையில் நோயாளிக்கு Cardiac Resynchronization Therapy Defibrillator கருவி வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. திருப்பூரை சேர்ந்த சரவணகுமார் என்ற முதியவர், சீரற்ற இருதயதுடிப்பு காரணமாக, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். PACEMAKER கருவி செலுத்தியும் அவதிப்பட்ட அவருக்கு, வெற்றிகரமாக CRT-D கருவி பொருத்தப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் 10 லட்ச ரூபாய் வரை செலவாகும் நிலையில், முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டதாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்