Kodaikanal | காட்டுப்பன்றி தாக்கிய விவகாரம்! போராட்டத்தில் குதித்த ஊர்மக்கள்! கொடைக்கானலில் பரபரப்பு

Update: 2025-04-26 16:17 GMT

சாலையில் மரங்களை வெட்டிப் போட்டு, 6 மணி நேரமாக மறியல்

கொடைக்கானலில் சிறுவன் உட்பட 4 பேரை காட்டு பன்றி தாக்கிய விவகாரத்தில், வன அலுவலர் சம்பவ இடத்திற்கு வர வலியுறுத்தி, 6 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடுதல் தகவல்களை வழங்குகிறார் செய்தியாளர் ஹரிஹரன்....

விவகாரத்தில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபடும் கிராம மக்கள்,கிராமத்தின் நுழைவாயில் பகுதியில் மரங்களை வெட்டி போட்டு போராட்டம், விவசாயம் செய்ய வன விலங்குகளால் தொந்தரவு இருக்க கூடாது என மாவட்ட வன அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து உறுதி தரவேண்டும் என கூறி சாலையில் உணவு சமைத்து போராட்டம்

காய்கறிகள் ஏற்றி செல்லும் வாகனம் மற்றும்,ஒரு சில சுற்றுலாப்பயணிகள் வாகனங்கள் தற்போது வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது, இதனால் இப்பகுதியில் பரபரப்பாக காணப்படும் சூழ்நிலையே தற்போது வரை காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்