பைக்கில் கெத்து காட்டி சாகச ரீல்ஸ் - பாடம் புகட்டிய போலீசார்

Update: 2025-03-25 16:56 GMT

கன்னியாகுமரி மாவட்டம் , களியக்காவிளை அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். களியக்காவிளை சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் கன்முன்னே இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்து கெத்து காட்டி இளைஞர்கள் ரீல்ஸ் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களை கொண்டு 5 இளைஞர்களை அடையாளம் கண்ட போலீசார் 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தங்கள் தவறை உணர்வதாக இளைஞர்கள் மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்