மந்தி பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு நேர்ந்த கதி - உஷார் மக்களே

Update: 2025-03-25 03:17 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஓட்டலில், மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஓட்டலில் மதியம் பிரியாணி வாங்கி வந்து இரவில் குடும்பத்துடன் சாப்பிட்டுள்ளனர். அப்போது அடுத்தடுத்து ஒவ்வொருவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஓட்டலில் ஆய்வு செய்து அங்கிருந்த பொருட்களை ஆய்வுக்கு எடுத்து சென்று ஓட்டலையும் மூடியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்