கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே கஞ்சா அடித்ததை தட்டிக் கேட்ட முன்னாள் ராணுவ வீரர் மீது போதை இளைஞர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேசவன்புதூர் பகுதியில் இளைஞர்கள் சிலர் கஞ்சா அடித்ததை முன்னாள் ராணுவ வீரர் சதீஸ் மோகன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த போதை இளைஞர்கள் சதீஸ் மோகன் வீட்டுக்கு சென்று தகாத வார்த்தைகளைப் பேசி தகராறில் ஈடுபட்டதுடன் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பரத் என்ற இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.