பார்வேட்டை உற்சவம்... வடகலை Vs தென்கலை - முற்றிய வாக்குவாதம்

Update: 2025-01-16 02:38 GMT

பார்வேட்டை உற்சவத்திற்கு வந்த வரதராஜப் பெருமாளுக்கு மண்டகப்படி நடைபெற்றது. அப்போது, ஸ்தோத்திரப் பாடல் பாடுவதில் வடகலை பிரிவு தாத்தாச்சாரியார்களுக்கும், தென்கலை பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தென்கலை பிரிவினர், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி ஸ்தோத்திரப் பாடல் பாட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். காவல்துறையினரும், இந்து சமய அறநிலையத் துறையினரும், இருபிரிவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்திய நிலையில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இச்சம்பவத்தால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், தங்கள் ஊரில் இதுபோன்ற பிரச்சனையை வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்