Kanchipuram | செல்போன் கேட்டு கல்லூரி மாணவருக்கு கத்திகுத்து - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரம் அருகே கல்லூரி மாணவனை கத்தியால் குத்தி விட்டு செல்போன் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாலாஜாபாத் பெரியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பு வருகிறார். சம்பவத்தன்று கிரிக்கெட் பயிற்சி முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, மர்மநபர் செல்போனை கேட்டு மிரட்டி உள்ளார். மாணவன் தர மறுத்த நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வயிற்றுப் பகுதியில் குத்தி விட்டு செல்போனை பறித்துச் சென்றுள்ளார். உடனடியாக மாணவனை மீட்ட மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், தனிப்படை அமைத்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.