அழுகிய நிலையில் ஏரியில் மிதந்து வந்த 3 சடலங்கள் - சென்னைக்கு அருகில் பரபரப்பு

Update: 2025-01-16 02:16 GMT

காட்டாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட விழுதவாடி ஏரியில், 3 சடலங்கள் மிதப்பதாக வந்த தகவலின் பேரில், விரைந்து சென்ற போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இறந்த இளைஞர்கள் பழைய சீவரம் பகுதியைச் சேர்ந்த சத்ரியன், விஷ்வா, பரத்ராஜ் என தெரியவந்தது. 3 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன நிலையில், சாலவாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுதவாடி ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள மூவரும், குளிக்க வந்து நீச்சல் தெரியாமல் உயிரிழந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்