சென்னையில் டேட்டிங்க்கு ஆள் தேடிய அமெரிக்க பெண் IT ஊழியர் கதறல்..அவுட்டிங் வந்த ஆண் நண்பனும் கதறல்

Update: 2024-11-09 06:43 GMT

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த பெண் ஒருவருடன், டேட்டிங் ஆப் மூலம் பழகி ஒரே நாளில் அவுட்டிங் வரை சென்ற இளைஞர், தற்போது போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் சிக்கி இருக்கிறார். என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

கணவரை விவாகரத்து செய்து அமெரிக்காவில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் சென்னையில் செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..

டேட்டிங் ஆப் மூலம் காலையில் சாட்டிங், மதியம் மீட்டிங், நைட் அவுட்டிங் என ஒரே நாளில் இளைஞர் ஒருவருடன் பழகிய பின்னர் அவர் அளித்த புகாரும், பின் அரங்கேறிய திருப்பமும்தான் ஹைலைட்...

கவுதம் வாசுதேவ் மேனன் பட ஹீரோ போல், பெண்ணுடன் டேட்டிங் ஆப்பில் பேசி ஒரே நாளில் அவரை அவுட்டிங் வரவழைத்த மன்மதன்தான் இந்த பிரசாந்த்..

டேட்டிங் ஆப் மூலம் டி.எல்.எப்பில் உணவு கடை நடத்தி வரும் இவர், கடந்த இரண்டாம் தேதி கத்திபாரா பாலம் அருகே பெண்ணை வரவழைத்து, பின் தன் காரில் ஏற்றி ஊர் சுற்றி இருக்கிறார்..

இறுதியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹோட்டலில் பெண்ணுடன் சேர்ந்து இரவு உணவையும் முடித்திருக்கிறார்...

அப்போது புறப்படும் நேரம் பார்த்து, கார் பார்க்கிங்கில் வைத்து பெண் அணிந்திருந்த 4 சவரன் நகைகளை நாசுக்காக வாங்கி தன் கழுத்தில் போட்டு பார்த்த பிரசாந்த், நகைகளை நாளைக்கு தருவதாக கூறி கிளம்பிச் சென்றதாக கூறப்படுகிறது..

கிளம்பிச் சென்ற பிரசாந்த், அதன் பின் திரும்பி வரவேயில்லை எனவும்.. செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது..

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், திருவல்லிக்கேணி போலீசில் புகாரளித்த நிலையில், விசாரணையில் ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் இந்த மன்மதன்...

டேட்டிங்கின் போது, பெண்னை நேரில் பார்த்து அவர் தன்னை விட பெரியவர் என்பதை அறிந்து கொண்டதாகவும், மேலும் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை விவாகரத்து செய்திருப்பதையும் அறிந்து நகைகளை திருப்பி கொடுத்து விட்டு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்..

இதனால், குழம்பிப்போன போலீசார் இருவரையும் காவல்நிலையத்திற்கு நேரில் வருமாறு அழைத்து விசாரணையை முடுக்கி விட்டிருக்கின்றனர். உரிய விசாரணை தான் யார் சொன்னது உண்மை என்பதை வெளியே கொண்டு வரும்...

Tags:    

மேலும் செய்திகள்