காதல் ஜோடிக்கு வாடகை வீடு எடுத்து பெற்றோரே லிவிங் ரிலேஷன்சிப்பில் இருக்க வைத்த விசித்திரம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், அஜிலின் ரோமாரியோ என்ற 21 வயது இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இளைஞரை காணவில்லை என அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடிய நிலையில்,
திருப்பதிசாரம் பகுதியில், வாடகை வீட்டில் 17 வயது சிறுமி ஒருவருடன் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மலர்ந்ததாகவும், சிறுமி 18 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைப்பதாக கூறி, சிறுமியின் பெற்றோர் வாடகை வீடு எடுத்து இருவரையும் தங்க வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே இதே சிறுமி அளித்த புகாரின் பேரில் சில மாதங்களுக்கு முன் வேறொரு இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதானதும் குறிப்பிடத்தக்கது.