6 கி.மீ. தாண்டி தலையில் சுமந்து வரும் மதிய உணவு - அரசின் நடவடிக்கை என்ன?

Update: 2025-01-29 07:16 GMT

6 கிலோ மீட்டர் தூரம் வரை வனப்பகுதியில், அரசு பள்ளி மாணவர்களின் உணவை சுமந்து செல்லும் அவல நிலை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சிவனப்பள்ளி கிராமத்தில் நிலவுகிறது. இந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், சமையல் கூடம் பயன்பாட்டிற்கு வராத நிலையில் தான், இந்த நிலைமை தொடர்கதையாகி வருகிறது. 15 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளிக்கு, 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள மாருப்பள்ளி என்ற மற்றொரு கிராமத்தின் அரசு பள்ளியில் சமைத்த உணவை, யானைகள் உலாவும் வனப்பகுதிக்குள் நடந்தே வந்து கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே குடிநீர், சமையல் கூடம், சாலை வசதி உள்ளிட்டவையை அரசு உடனடியாக செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்