திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை அடிவாரம் குரும்பத்தெரு என்ற சிறு கிராமத்தை சேர்ந்தவரான விஜயகுமார், தேனீ வளர்ப்பில் மாதம் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை லாபம் ஈட்டி வருகிறார். இவர், தமிழக அரசு, தேனீ வளர்ப்பாளர்களுக்கு அரசு சார்பில் உழவர் சந்தை மற்றும் மற்றும் அரசின் பிற இடங்களில் தேன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தி தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.